மரண அறிவித்தல் (Obituary)

திருமதி தேவாம்பிகை சிவக்கொழுந்து

இறைவன் அடியில் : 01, Nov 2016
பிறந்த இடம்
இணுவில் |
வாழ்ந்த இடம்
உடுப்பிட்டி
இணுவில் கிழக்கு சிவகாமி அம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், உடுப்பிட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட தேவாம்பிகை சிவக்கொழுந்து அவர்கள் 01-11-2016 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சங்கரப்பிள்ளை(இளைப்பாறிய ஆசிரியர்- இணுவில் கிழக்கு), நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கதிரிப்பிள்ளை மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சிவக்கொழுந்து(இளைப்பாறிய பிரதம தபால் அதிபர்) அவர்களின் அன்பு மனைவியும்,

தேவகுமாரி(ஆசிரியை- தொண்டமானாறு வீரகத்தி மகாவித்தியாலயம்), கேசகுமாரி(வடக்கு மாகாணசபை திட்டமிடல் பிரதேச செயலகம்- கரவெட்டி), புவனகுமார்(ஐக்கிய அமெரிக்கா), புவனகுமாரி(ஆசிரியை- விவேகானந்தா தேசிய கல்லூரி, கொழும்பு), தாமகுமாரி(அபிவிருத்தி உத்தியோகத்தர்- பிரதி நீர்ப்பாசன பணிப்பாளர் பணிமனை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான ரேணுமதி, கௌரிதேவி, தேவராஜன், ஜெகந்நாதன், குருலிங்கம், மற்றும் சிவஈஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

Dr. யோகேந்திரன்(வைத்திய பொறுப்பதிகாரி- ஆயுர்வேத வைத்தியசாலை, கரவெட்டி), கேதீஸ்வரன்(ஆசிரியர்- குருநாகல் இந்துக்கல்லூரி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை, செல்லமுத்து, பாலசிங்கம், குமாரசூரியர், பூரணம், ஆறுமுகம், மற்றும் திசைவீரசிங்கம்(ஜமேக்கா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காகினி(உடுப்பிட்டி மகளிர் கல்லூரி), அகிலேஸ் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 06-11-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வல்லை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தொடர்புகளுக்கு
வீடு — இலங்கை
செல்லிடப்பேசி: +94768942026
சிவதேவி(இல்லம்) — இலங்கை
தொலைபேசி: +94212264734
தகவல்பிள்ளைகள், மருமக்கள்

இரங்கல் செய்தியை தெரிவிக்க.